ஜாக்சன் துரை 2 படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது

#India #Cinema #Actor #TamilCinema #Movie
Mani
2 years ago
ஜாக்சன் துரை 2 படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது

பி.வி.தரணி இயக்கிய 'ஜாக்சன் துரை' திரைப்படம் 2016 இல் வெளியானது. இதில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்தனர், இவர்களுடன் பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த பேய் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சரத் ரவி, மனிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1940ஆம் ஆண்டு ஊட்டிக்கு அருகில் உள்ள கிராமத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இன்று 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது சிபி சத்யராஜின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது சிபி சத்யராஜ் குதிரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4