நைஜர் ஆட்சி மாற்றம் : பிரஞ் ஒளிபரப்புக்களுக்கு தடை

#France #Lanka4 #தடை #Ban #லங்கா4 #பிரான்ஸ்
நைஜர் ஆட்சி மாற்றம் : பிரஞ் ஒளிபரப்புக்களுக்கு தடை

நைஜர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பை தொடரந்து, அங்குள்ள பிரெஞ்சு ஊடகங்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Niger நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளதை அடுத்து, அங்குள்ள பிரெஞ்சு ஊடகங்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 RFI மற்றும்France 24 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வித அறிவித்தல்களும் இன்றி இவ்விரு ஊடகங்களின் ஒளிபரப்புகளும் முடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

நேற்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் இந்த தொலைக்காட்சி சேவைகள் பொதுமக்களால் பார்வையிடமுடியாமல் உள்ளன. இந்த தடைக்கு பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

”பிரான்சின் பத்திரிகைச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது’ என அது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜரில் இராணுவ சதியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டின் இராணுவ தளபதி புதிய ஆட்சியாளராக தம்மை அறிவித்துள்ள நிலையில் இராணுவத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தடை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.