தனுசின் 51-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

#Cinema #Actor #TamilCinema #Movie
Mani
2 years ago
தனுசின் 51-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

'வாத்தி' படத்தில் நடித்த தனுஷ், 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது தனது 51வது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ், சேகர் கம்முலா தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி வருகிறது. தனுஷ் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஏற்ற கதையை உருவாக்கும் பணியில் சேகர் கம்முலா ஈடுபட்டு வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஷ்மிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தயாராகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4