இங்கிலாந்தில் ரயில் சேவைகள் இரத்து!
#world_news
#Lanka4
#England
Dhushanthini K
1 year ago
இங்கிலாந்தின் மிகவும் பிரபலமாக நடைபெறும் Pride திருவிழாவை முன்னிட்டு ரயில் சேவைகள் இன்று (05.08) ரத்து செய்யப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுனர்கள் சங்கமான ASLEF, இது குறித்த அறிவிப்புகளை ரயில் ஆப்பிரேட்டர்களுக்கு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி பிரைட் திருவிழா நடைபெறும் இடத்திலிருந்து சுமார் 23 மைல் (37 கிமீ) தொலைவில் உள்ள க்ராலி நகரில் உள்ள பாலங்களில் ரயில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பிரைடுக்குச் செல்பவர்களை அங்கு செல்வதற்கு மாற்று வழிகளைத் தேடுமாறும்,கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதே தங்களின் நோக்கம் என ரயில்வே சங்கம் தெரிவித்துள்ளது.