டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

#India #Accident #Delhi #Hospital #Attack #fire #Tamilnews
Mani
1 year ago
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனையின் எண்டோஸ்கோபி பிரிவு இருக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்த நோயாளிகள் உடனடியாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து தீப்பிடித்ததால் கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறியது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக பீதியை ஏற்படுத்தியது. மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!