அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

#India #Accident #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

இன்று, கோவாவின் பனாஜி அருகே, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த சம்பவம் பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் உட்பட 6 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே ஸ்கூட்டரில் சென்ற கணவன்-மனைவியும், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4