பிறந்தநாள் பரிசு! போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'புஷ்பா 2' படக்குழு

#India #Cinema #TamilCinema
Mani
2 years ago
பிறந்தநாள் பரிசு! போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'புஷ்பா 2' படக்குழு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜெகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'புஷ்பா'. கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது..

தற்போது 'புஷ்பா-தி ரூல்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் பகத் ஃபாசிலின் இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4