பிரான்ஸில் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ அபாயம்

#France #Lanka4 #heat #வெப்பமயமாதல் #காடு #fire #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ அபாயம்

தொடர்ச்சியான வெப்ப நிலை அதிகரிப்பால் காட்டுத்தீ ஏற்பட்டுப் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 மார்செய் நகரத்தை உள்ளடக்கிய Bouches-du-Rhône மாவட்டம் கடுமையான காட்டுத் தீ ஆபத்தினால் சிவப்பு எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து Var மற்றும் Vaucluse பகுதிகள் செஞ்சிவப்பு எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மேலும் நான்கு மாவட்டங்களிற்கும் இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த வாரத்திலிருந்தே கோர்ஸ் தீவகம் மற்றும் மத்தியதரைக் கடற்பகுதி நகரங்களிற்கும் கடுமையான காட்டுத் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône பகுதியின் 25 மலைப்பகுதிகள் மற்றும் காட்டுப்பகுதிகள், மாவட்ட ஆணையங்களால் மக்களின் நடமாடத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!