பிரான்ஸில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் அபாயம்!

#France #prices #Fuel #Lanka4 #அதிகம் #லங்கா4 #விலை #பிரான்ஸ்
பிரான்ஸில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் அபாயம்!

அண்மைய வாரங்களில் பிரான்சில் எரிபொருகளின் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அடுத்து வரும் வாரங்களிலும் விலை அதிகரிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

 சர்வதேச சந்தைகளில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த விலையேற்றம் அதிகரிக்கப்படும் என அறிய முடிகிறது. கடந்த ஜூலை 29 ஆம் திகதி டீசல் 7 சதங்களினாலும், SP95 பெற்றோல் 4 சதங்களினாலும் அதிகரித்திருந்தது.

 இந்நிலையில், இவ்வார இறுதியில் மீண்டும் இந்த எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு உள்ளாகும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவில் எரிபொருட்கள் உற்பத்தி குறைவடைந்துள்ளது. 

இதனால் சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வி காரணமாக விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரல் எண்ணை கடந்த ஒரு மாதத்தில் 10% வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மேலும் இந்த விலையேற்றம் 4% வீதத்தால் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.