காஞ்சிபுரம் ஸ்ரீ மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா

#India #Temple #பதிவு #ஐங்கரன் #Tamilnews
Mani
2 years ago
காஞ்சிபுரம் ஸ்ரீ மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா

காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் பிரசித்தி பெற்ற மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் 23ம் ஆண்டு ஆடித் திருவிழாவை காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தொழிலதிபருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நேற்று இரவு நடந்த திருவிழாவில் காஷ்மீரில் இருந்து 4 டன் ஆப்பிள் பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஆப்பிள்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் கம்பீரமாக காட்சியளித்தார். தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி, கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மாவிலை, வேப்பிலை, தோரணங்கள் கட்டி திருவிழா கோலம் பூண்டு ரம்மியமாக காட்சியளித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4