பிரான்ஸ் ஐரோப்பாவின் மிகப்பெரிய மின்சார ஏற்றுமதி நாடாகியுள்ளது
#France
#Power
#Export
#Lanka4
#European union
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
ஐரோப்பாவிலே மிகப்பெரிய மின்சார உற்பத்தி செய்யும் நாடாகவும் அதனை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் பிரான்ஸ் மாறியுள்ளது. இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களில் 17.6 டெராவாட்ஸ் மின்சாரத்தினை பிரான்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு முதன்மை நாடாக இருந்த பிரான்ஸ், தற்போது இவ்வருடம் மீண்டும் இரண்டாவது முறையாக முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது.
பிரான்ஸில் பல்வேறு மின் ஆலைகள் மீள இயங்கவும் காற்றாலைகள் அமைக்கப்பட்டுமுள்ளதால் இது சாத்தியமானதாக தெரியவந்துள்ளது. மின்சாரம் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளில் பிரித்தானியா மற்றும் இத்தாலி அதிகளவில் உள்ளன.