கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

#India #Parliament #Province #Kerala
Prasu
1 year ago
கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயரை ‘கேரளா’ என்பதில் இருந்து ‘கேரளம்’ என்று அனைத்து மொழிகளிலும் மாற்ற மத்திய அரசைக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டசபை புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் சபையில் தாக்கல் செய்திருந்த நிலையில், அனைத்து உறுப்பினர்களாலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்வைத்து பேசிய முதலமைச்சர், “மலையாளத்தில் எங்கள் மாநிலத்தின் பெயர் கேரளா. நவம்பர் 1, 1956 அன்று நாட்டில் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

அதே நாளில்தான் கேரளா உருவான நாள். மலையாளம் பேசும் மக்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கேரள மாநிலம் அமைக்க வேண்டும் என்பது சுதந்திரப் போராட்டத்தின் போது கோரிக்கையாக இருந்தது. “ஆனால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையின் கீழ், எங்கள் மாநிலத்தின் பெயர் கேரளா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் கீழ் அனைத்து அலுவல் மொழிகளிலும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு தேவையான திருத்தங்களைச் செய்ய மத்திய அரசை பேரவை ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆளும் கட்சியின் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி வரவேற்பு தெரிவித்திருந்ததுடன், தீர்மானத்தில் எந்த திருத்தங்களையும் மாற்றங்களையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!