ஒரு வழியாக தனுஷ், ஐஸ்வர்யாவை ஒரே இடத்தில் பார்க்க வைத்த ரஜினி

#Cinema #TamilCinema #Lanka4 #danush #rajini kanth
Kanimoli
1 year ago
ஒரு வழியாக தனுஷ், ஐஸ்வர்யாவை ஒரே இடத்தில் பார்க்க வைத்த ரஜினி

சினிமாவில் என்ன தான் உச்ச நட்சத்திரமாக ரஜினி ஜொலித்தாலும் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மருமகன் தனுஷ் இருவரும் பிரிந்து வாழ்வது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் மாலத்தீவு கிளம்பினார். அங்கு தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் உட்கார வைத்து சமரசம் பேச வேண்டும் என்று ரஜினி போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகாமல் போனது. 

ஆனால் இப்போது ஜெயிலர் பட ரிலீஸில் அது நடந்து விட்டது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டரில் மிரட்டி இருக்கும் படம் தான் ஜெயிலர். இந்த படம் இன்று உலகம் முழுவதும் 4000-திற்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் ரஜினியின் ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க இனோவா காரில் வந்து இறங்கினார். தனுஷ் வந்த உடனே ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் ஜெயிலர் என்கின்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர் முதல் முதலாக ஒரே தியேட்டரில் வந்து படத்தைப் பார்க்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மீட்டிங்கை நிச்சயம் ரஜினி தான் ஏற்பாடு செய்திருப்பார். 

மாலத்தீவில் மிஸ் ஆன மீட்டிங்கை ரோகிணி தியேட்டரில் நடத்தியுள்ளார். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இவர்கள் இருவரும் முன்பு போல் சேர்ந்து வாழ்ந்தால் எப்படி இருக்கும். இவர்கள் இருவரும் தியேட்டரில் சந்திப்பார்களா, இருவரும் இணைந்து படம் பார்ப்பார்களா, படத்தைப் பார்த்துவிட்டு இருவரும் சேர்ந்து ஒன்றாக கிளம்புவார்களா என ஏகப்பட்ட கேள்வி ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை ஆர்வம் தான் ரஜினிக்கும் இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!