இராணுவத்தை பலப்படுத்த திட்டமிடும் ஐரோப்பிய நாடு!
ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த பிறகு பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு இராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் ஜெர்மன் தனது இராணுவத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது இந்த விடயத்தை முன்னெடுப்பதில் ஜெர்மனுக்கு பல பின்னடைவுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஜெர்மன் இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தற்போது இராணுவத்தில் இருப்பவர்களும் அதில் இருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 183,000 இலிருந்து 2031 இல் 203,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், அதை அடைவது கடினமானது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவை எல்லாவற்றிற்கும்மேல், ஜேர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.