குஜராத் சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

#India #Accident #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
குஜராத் சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் மினி வேனும் நின்று கொண்டிருந்த லாரியும் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பகோதரா கிராமத்திற்கு அருகில் ஒரு லாரி பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அதன் மீது மற்றொரு மினி வேன் மோதியது. இதில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளது.