பிரான்ஸ் கல்வியமைச்சர் கப்ரியல் அத்தாலின் பாடசாலை சீருடைத்திட்டம்

#School #France #Lanka4 #Ministry of Education #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸ் கல்வியமைச்சர் கப்ரியல் அத்தாலின் பாடசாலை சீருடைத்திட்டம்

புதிய தேசியக் கல்வியமைச்சரான கப்ரியல் அத்தால் ஒரு பத்திரிகைச் செவ்வியில், பாடசாலை மாணவர்களிற்குச் சீருடை ஒன்றாக இருப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி ஒன்றை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

 பல மாகாணங்கள், மற்றும் மாவட்டங்கள் இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்குத் தாங்கள் தயார் என அறிவித்து, கல்வியமைச்சரிற்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இதில் பெசியே (béziers) நகரத்தின் நகரபிதா ரொபேர் மெனார், உடனடியாக இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளனர். 

இதனையும் தாண்டி, 2014 ஆம் ஆண்டிலேயே ரொபேர் மெனார் இந்தச் சீருடைத் திட்டத்தினை முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போலவே பல நகரபிதாக்கள் மற்றும் மாகாணத் தலைவர்கள் சீருடைத் திட்டத்தினை வழிமொழிந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!