சத்யராஜின் 250வது படம் 'ஜாக்சன் துரை 2'

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
சத்யராஜின் 250வது படம் 'ஜாக்சன் துரை 2'

கதாநாயகன், வில்லன், என பல வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், தற்போது 'ஜாக்சன் துரை 2' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகமான "ஜாக்சன் துரை" 2016 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதில் தனது மகன் சிபிராஜூடன் அவர் இணைந்து நடித்து இருந்தார்.

'ஜாக்சன் துரை' படத்தின் இரண்டாம் பாகம் 7 ​​ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். மீண்டும் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் திரையுலகில் இணையவுள்ளனர். இந்த படம் சத்யராஜின் 250வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, கல்யாண் வெங்கடராமன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4