பிரான்ஸில் வாகனமொன்றிலிருந்து சடலம் மீட்பு!
#Police
#France
#Body
#Lanka4
#வாகனம்
#பொலிஸ்
#லங்கா4
#vehicle
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
வாகனம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் Val-de-Marne மாவட்டத்தின் Villeneuve-Saint-Georges நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Yerres ஆற்றங்கரைப் பகுதி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரவன் (Caravan) ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் சிலர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து விரைந்து வந்த அவர்கள், அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவரது சடலத்தை மீட்டனர்.
குறித்த நபர் தற்கொலை அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுகிறது. வாகனத்தில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.