பிரான்ஸிலுள்ள கிராமமொன்றில் மாயமான சிறுவன்
Émile எனும் சிறுவன் காணாமல் போனதில் இருந்து மூடப்பட்டுள்ள கிராமம், கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வியாழ்க்கிழமை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Émile எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் குறித்து இதுவரை தீர்க்கமான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், அந்நகர மக்கள் பெரும் அமைதியின்மையை சந்தித்துள்ளனர்.
பல நாட்களாக இடம்பெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, சிறுவனின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த மலைவாழ் கிராமம் மூடப்பட்டு, இரு வாரங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.
மீண்டும் அங்கு பொதுமக்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்வு அந்நகர மக்களை மேலும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த அந்நகர முதல்வர், இம்மாத இறுதி வரை (ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை) மீண்டும் அக்கிராமம் மூடப்படுவதாக அறிவித்தார்.