ஆங்கிலக்கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
#France
#Lanka4
#லங்கா4
#Boat
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
இன்று சனிக்கிழமை அதிகாலை ஆங்கிலக்கால்வாயில் பயணித்த அகதிகள் படகு ஒன்று கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு அகதிகள் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடக்கு கடற்பிராந்தியமான Sangatte இல் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
கடலில் தத்தளித்த 50 அகதிகள் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களை தேடும் பணி இடம்பெற்றுவருவதாகவும் அறிய முடிகிறது. அதேவேளை மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஐந்து பிரெஞ்சு கப்பல்களும் இரண்டு பிரித்தானிய கப்பல்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.