கெசினோ சூதாட்ட வரியை அதிகரிக்க புதிய சட்டமூலம்

#SriLanka #Parliament #Case
Prasu
2 years ago
கெசினோ சூதாட்ட வரியை அதிகரிக்க புதிய சட்டமூலம்

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புகள் மையப்படுத்தி கெசினோ சூதாட்ட வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கான வரி அதிகரிப்பு சட்டமூலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கெசினோ சூதாட்ட வரியை அதிகரிக்க சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் இன்னும் முழுமையப்படுத்தப்படாத நிலையில் அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சுற்றுலாத்துறையை பாதிக்காத வகையில் இவ்வாறான வரி சட்ட மூலங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டயனா கமகே கேட்டுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4