சூர்யா கமிட் ஆகியுள்ள அடுத்தடுத்த 4 படங்கள்

#Cinema #TamilCinema #Lanka4 #surya
Kanimoli
1 year ago
சூர்யா கமிட் ஆகியுள்ள அடுத்தடுத்த 4 படங்கள்

கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. ஆனால் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டர் இவரை ஒய்யாரத்தில் தூக்கி நிறுத்தி விட்டது. இதனைத் தொடர்ந்து பலருக்கும் ஃபேவரிட் ஹீரோவாக மனதிற்குள் பதிந்துவிட்டார். அந்த வகையில் இவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் இந்த வருடம் இவருடைய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதற்காக அடுத்த வருடம் இவருக்கான வருடமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு படங்களில் கமிட்டாய் இருக்கிறார். அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படமான வரலாற்று சம்பந்தமான படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பான் இந்திய அளவில் ரிலீசுக்கு பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் இதில் சூர்யாவுடன் கெட்ட அப் ரொம்பவே வித்தியாசமாகவும் படம் தாறுமாறாக இருக்கப் போகிறது என்றும் எதிர்பார்ப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

 இதனைத் தொடர்ந்து இவருடைய 43 வது படமான இன்னும் பெயரிடாத படத்தை சுதா கொங்கரா இயக்கப் போகிறார். இவர் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே நடித்து வெளிவந்த சூரரை போற்று தேசிய விருது வாங்கி கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. அந்த வகையில் இவர்களுடைய காம்பினேஷன் வெற்றியாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது மேலும் சூர்யாவிற்கு ரோலக்ஸ் என்ற இமேஜை உருவாக்கிக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவி என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணையப் போகிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் ரோலக்ஸ். அடுத்ததாக ரொம்ப நாள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாடிவாசல். இப்படத்தை வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு இவர்களுடைய கூட்டணி ஆரம்பமாகப் போகிறது. கண்டிப்பாக இவர்களுடைய கூட்டணியும் விருது வாங்கும் அளவிற்கு போகும். இப்படி தொடர்ந்து கமிட் ஆகியுள்ள அனைத்து படங்களும் இவருடைய மார்க்கெட் அதிகரித்து சூர்யாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!