பிரான்ஸ் தீ விபத்தொன்றில் மூவர் பலி - 21 பேர் காயம்

#Death #France #Lanka4 #தீ_விபத்து #மரணம் #fire #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸ் தீ விபத்தொன்றில் மூவர் பலி - 21 பேர் காயம்

பிரான்சின் தென்கிழக்கு நகரமான Grasse (Alpes-Maritimes) இல் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் மூவர் பலியாகியுள்ளனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றது. அதிகாலை 3 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவி கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருந்துள்ளது. தீயணைப்பு படையினர் கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த அனைவரையும் வெளியேற்றினர். மிக நீண்ட போராட்டத்தின் பின்னர் கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 இவ்விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து அப்பகுதியை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!