பிரான்ஸில் புயல் வீசப்படும் ஆபத்து காணப்படுகிறது
#France
#today
#Lanka4
#இன்று
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
இன்று திங்கட்கிழமை இரவு பலத்த புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தென்மேற்கு பகுதிகளுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Corrèze , Lot , Lot-et-Garonne , Tarn-et-Garonne, Dordogne ஆகிய ஐந்து மாவட்டங்களில் பலத்த புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணியில் இருந்து 11 மணி வரை மேற்குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் இந்த எச்சரிக்கை தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.