ஹர்காரா டிரைலர் வைரலாகி வருகிறது

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
ஹர்காரா டிரைலர் வைரலாகி வருகிறது

'வி 1 மர்டர் கேஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. நவீன தொழில்நுட்பம் இல்லாத ஒரு தொலைதூர மலைக்கிராமத்திற்கு சென்று அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கையை ஆராயும் தபால்காரரின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் கௌதமி கதாநாயகியாக நடித்திருந்தார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே உள்ள மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

கலர்புல் பீட்டா மோமண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.