டுவிட்டரில் 'புளூ டிக்'-ஐ இழந்த பிசிசிஐ

#India #sports #2023 #Tamilnews #ImportantNews #Sports News
Mani
1 year ago
டுவிட்டரில் 'புளூ டிக்'-ஐ இழந்த பிசிசிஐ

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது.

இதில், முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து தொடரை தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. அதோடு தொடரையும் இழந்தது. மேலும், 17 ஆண்டுகள் சாதனையிலும் தோற்றது. ஆம், 17 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று சொல்லக் கூடிய பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் மார்க்கை இழந்தது. இதற்கு என்ன காரணம் என்றால், நாளை நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், அவரவர் புரபைல் பிக்ஸரில் தேசியக் கொடி இடம் பெறும் வகையிலும் மாற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் சமூக ஊடக தளத்தின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, சரிபார்க்கப்பட்ட பயனர்கள் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றினால் அவர்களின் ப்ளூ டிக் மார்க்கை இழப்பார்கள். இருப்பினும், டுவிட்டரில் விரைவான கணக்கு மதிப்பாய்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் மார்க்கை மீண்டும் 3 முதல் 4 நாட்களுக்குள் திரும்ப பெற முடியும்.

சுவாரஸ்யமாக, நேற்று தனது சுயவிவரப் படத்தை இந்தியக் கொடியாக மாற்றிய பிறகும், பிரதமர் மோடியின் கணக்கு, அரசாங்கம் அல்லது பலதரப்பு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் தனது சுயவிவரப் படத்தை தேசியக் கொடிக்கு மாற்றிய பிறகும் கூட அவர் தனது அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் மார்க்கை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!