பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு உதவும் சட்டதரணிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்!
பிரித்தானியாவில் பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் அறிவித்துள்ளார்.
இதற்காக ஒரு செலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டள்ள உள்துறை அமைச்சர், சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விரும்புகின்றனர் எனவும் ஒழுக்கமற்ற சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டவிரோத படகுகளை நிறுத்துவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன்” எனவும் கூறியுள்ளார்.