பிரான்ஸ் - பரிஸில் சுற்றுலாபயணியிடம் கொள்ளையிட்டோர் கைது
#Arrest
#France
#Tourist
#Robbery
#Lanka4
#லங்கா4
#கொள்ளை
#சுற்றுலா
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
சுற்றுலாப்பயணி ஒருவரிடம் இருந்து €350,000 யூரோக்கள் பெறுமதியுடைய கைக்கடிகாரம் ஒன்றை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 8 மணி அளவில் rue Marbeuf வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரை இரு திருடர்கள் வழிமறித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு €350,000 யூரோக்களாகும். கொள்ளையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 25 மற்றும் 27 வயதுடைய இருவரே கைதாகினர்.