பிரபாகரனை போன்று கலைஞர் கருணாநிதியையும் நேசித்தேன் - வைகோ

#India #SriLanka #srilankan politics
Prasu
1 year ago
பிரபாகரனை போன்று கலைஞர் கருணாநிதியையும் நேசித்தேன் - வைகோ

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் நான் எப்போதும் சமமாக நேசித்தேன் என ம.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்களுக்காக ம.தி.மு.க. குரல்கொடுத்திருந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சாடிய வைகோ, “நானும் பல்வேறு போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன். " என்றார்.

ஆனால், இந்த பயணத்தின் போது நான் ஒருபோதும் அதிநவீன அறைகள் அல்லது வாகனங்களை ஆடம்பரமாக எடுத்துக் கொண்டதில்லை" என்று கூறினார். தமிழ் மக்களின் நலன் கருதி திமுகவுடன் நட்பு கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள வைகோ, இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நட்புகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் நான் எப்போதும் சமமாகவே நேசித்தேன். படகில் சென்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, இந்த சந்திப்புக்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்து தி.மு.க கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர்.

இதன்பின் என்னை கட்டாயப்படுத்தி பிரபாகரன் அனுப்பினார். அப்போது ஒரு கடிதம் ஒன்றை கலைஞருக்கு கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கடிதத்தை கலைஞரிடம் கொடுத்த போது என்ன தான் பற்று இருந்தாலும் உயிரை வெறுத்து சென்றிருக்கக் கூடாது என கலைஞர் என்னிடம் கூறினார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்தால் ஓராண்டு சிறை சென்றேன். இன்னும் ஓராண்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்படியே தண்டனை வந்தாலும் ஏற்க தயாராகி உள்ளேன்.

 எவ்வாறாயினும், தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டேன், தொண்டர்கள் ஐவர் தீக்குளித்தனர். பின்னர் தொண்டர்களின் விருப்பத்திற்கு அமைய ம.தி.மு.க உருவாக்கப்பட்டதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.