2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி
#Lanka4
#Smoke
#London
Kanimoli
1 year ago
இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும்
நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார்.