இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

#India #people #Tamil #Rain #HeavyRain #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

மேகவெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏராளமானோர் சிக்கியுள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களுடன் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் டோராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் யமுனை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!