பிரான்ஸ் தேவாலயமொன்றில் மர்மப்பொதி - மக்கள் வெளியேற்றம்
#France
#Lanka4
#லங்கா4
#Church
#Bomb
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
Colombes நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மர்ம பொது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Colombes , (Hauts-de-Seine) நகரில் உள்ள Saint-Pierre Saint Paul தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. தேவாலயத்துக்கு மர்ம பொதி ஒன்று இருப்பதைக் கவனித்த தேவாலயத்தின் ஊழியர்கள், உடனடியாக காவல்துறையினரை அழைத்தனர்.
அத்துடன் தேவாலயத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், வெடிகுண்டு அகற்றும் படையினர் மேற்படி பொதியை சோதனையிட்டதில் அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.
அதன்பின்னர், ஒருமணிநேரம் கழித்து நிலமை சீரடைந்தது.