சந்திரயான்-3 சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைப்பு!

#India #Moon #Tamilnews #Breakingnews #ImportantNews #Rocket #Space
Mani
1 year ago
சந்திரயான்-3 சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைப்பு!
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உயரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வருகிறது. ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயானின் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த, ஜூலை 14ல் செலுத்தியது. இம்மாதம், 5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது.

இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இந்நிலையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உயரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது: நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உயரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வருகிறது. இதற்கிடையே நாளை(ஆகஸ்ட் 17) அடுத்த சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கும் பணி நடக்கிறது.

ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயானின் லேண்டர் 30 கி.மீ. உயரத்துக்கு செல்லும். ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயானின் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் படி, ஆக., 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, 'லேண்டர்' எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, 'ரோவர்' எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இவ்வாறு இஸ்ரோ நிறுவனம் கூறியுள்ளது.