பிரான்ஸ் வாழ் தமிழர்களால் வயல் மாதா விண்ணேற்பு பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது

#France #Lanka4 #கோவில் #celebration #லங்கா4 #Church #பிரான்ஸ்
பிரான்ஸ் வாழ் தமிழர்களால் வயல் மாதா விண்ணேற்பு பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது

பிரான்ஸ் தலைநகரை அண்டிய Baillet en France (95580) நகரின் வயல்கள் நிறைந்த பகுதியில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க, வயல் மாதா, காட்டு மாதா என நம்மவர்களால் அழைக்கப்படும் 'Notre Dame De France' அல்லது 'Reine de la Paix' எனும் அமைதியின் அரசி திருத்தலத்தில் நேற்றையதினம் (15/08) மிகவும் பிரமாண்டமான விண்ணேற்பு பெருவிழா பிரான்ஸ் வாழ் தமிழர்களால் நடத்தப்பட்டது.

 கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட வந்த இந்த பெருவிழா, 2022ல் இருந்து இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தால் நெறிப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. 'இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின், 17 பணித்தளங்களின் பங்கு மக்களின் கடுமையான ஓயாத உழைப்பும், அற்பணிப்பும் இந்த பெருவிழாவை பிரமாண்டமான விழாவாக நடத்த முடிந்தது என அதன் இயக்குனர் அருட் தந்தை போல் மத்தியு மதன்ராஜ் அவர்கள் paristamil.com செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

 நேற்றையதினம் நடைபெற்ற பெருவிழாவிற்கு சுமார் 12 000 பக்தர்கள் வருகை தந்தார்கள் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்திருந்த நிலையில், காவல்துறை சுமார் 10 000 பக்தர்களே வருகை தந்தார்கள் என அறிவித்துள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குனர் அருட்தந்தை போல் மத்தியு மதன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பித்த பெருவிழாவின் வழிபாடுகளை; இலங்கை அமல மரித் தியாகிகள் சபை குரு முதல்வர் ஜெயந்தன் பச்சைக் அவர்கள் சிறப்பாக நடாத்தினார்.

 'இந்த விண்ணேற்பு பெருவிழா 2024ம் ஆண்டு நடத்த முடியாது. காரணம் அடுத்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது என காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது' என்று அங்கு வருகை தந்த Notre dame de France திருத்தலத்தின் செயலாளர் Monsieur Pascal தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!