பிரான்ஸில் காகிதாதிகளின் விலையதிகரித்துள்ளது

#France #Lanka4 #அதிகம் #லங்கா4 #விலை #பிரான்ஸ்
பிரான்ஸில் காகிதாதிகளின் விலையதிகரித்துள்ளது

France சில் வரும் Septembre 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், l'OFC-Que Choisir எனும் ஆய்வுமையம் பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் குறித்த தங்களின் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 அந்த ஆய்வறிக்கையின்படி 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு பாடசாலை உபகரணங்களின் விலை ஏறத்தாழ 10% சதவீதத்தால் அதிகரித்து இருப்பதாக தெரியவருகிறது.

 உதாரணமாக பென்சில், பேனாக்களின் விலை 14% சதவீதத்தாலும், ஒற்றை, இரட்டை தாள்களின் விலை 20% சதவீதத்தாலும், வண்ணங்கள், தூரிகைகளின் விலை 9% சதவீதத்தாலும், Calculator போன்ற பாடசாலை அறிவியல் சாதனங்கள் 8% சதவீதத்தாலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விலையேற்றம் தரும் சுமையை குறைக்க அரசு வருடம் தோறும் வழங்கும் l'allocation de rentrée scolaire என்னும் கொடுப்பனவை ஒரு மாணவனுக்கு 20€ eurosவாக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!