பிரான்ஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!
#France
#Lanka4
#Crash
#மரணம்
#விபத்து
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
மேற்கு பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆற்றில் விழுந்த விமானம் படகு மூலமாக கட்டி இழுக்கப்பட்டு மீட்கப்பட்டது. நேற்று முன் புதன்கிழமை மாலை இச்சம்பவம் Lavau-sur-Loire நகரில் இடம்பெற்றுள்ளது.
சிறிய ரக விமானத்தில் பயணித்த நிலையில், திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் Nantes மற்றும் La Baule நகரங்களுக்கு உட்பட்ட ஆற்றுப்பகுதியில் விழுந்து மூழ்கியுள்ளது.
விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். மூவரில் ஒருவர் பிரபல ஊடகவியலாளர் Gérard Leclerc என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஆற்றில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.