10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம்!

#India #Cricket #sports #2023 #Player #Sports News
Mani
2 years ago
10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம்!

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் விதமாக வங்க தேசம் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி வங்க தேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இறுதியாக வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு முழு தொடரில் விளையாடி அதில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கொண்ட முழு தொடரில் விளையாடியது.

தற்போது 10 வருடங்கள் கழித்து தற்போதுதான் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட செல்கிறது. இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் மிர்புர் நகரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. வங்க தேசம் தனது முதலாவது போட்டியில் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4