தோல்வியை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த அமெரிக்க மகளிர் அணி பயிற்றுவிப்பாளர்

#Women #America #Resign #football
Prasu
1 year ago
தோல்வியை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த அமெரிக்க மகளிர் அணி பயிற்றுவிப்பாளர்

அமெரிக்க கால்பந்தாட்ட மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான வ்ளட்கோ அன்டோனோவ்ஸ்கி (Vlatko Andonovski) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க கால்பந்தாட்ட கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் FIFA மகளிர் உலகக்கிண்ண தொடரின் 16வது சுற்றில் ஸ்வீடன் அணியிடம் பெனால்டி முறையின் அடிப்படையில் அமெரிக்கா அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் அமெரிக்க கால்பந்தாட்ட மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான வ்ளட்கோ அன்டோனோவ்ஸ்கி (Vlatko Andonovski) தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் FIFA மகளிர் உலகக்கிண்ண தொடரில் அமெரிக்கா எதிர்கொண்ட ஐந்து போட்டிகளில் இரண்டுபோட்டிகள் நிலையில் முடிவடைந்துள்ளதுடன் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றது.

வ்ளட்கோ அன்டோனோவ்ஸ்கி (Vlatko Andonovski) கடந்த 2013 - 2017 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் கால்பந்து கழகங்களான எஃப்சி கன்சாஸ் சிட்டி (FC Kansas City) கன்சாஸ் சிட்டி கோமெட்ஸ் ( Kansas City Comets) ரெஜின் கழகம் (Reign FC) ஆகியவற்றின் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!