80 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய தம்பதி
முதியோர் இல்லத்தில் சந்தித்து கொண்ட பிரித்தானிய ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்தவர் 82 வயதான கிறிஸ்டோபர் ஸ்டிரீட்ஸ். இவர் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
அதே முதியோர் இல்லத்திற்கு கணவரை இழந்த 81 வயதான ரொசா வந்தார். இருவரும் பேசி நண்பர்களான நிலையில் டேட்டிங் சென்றனர்.
பின்னர் காதலுக்கு வயதில்லை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப கிறிஸ்டோபர் மற்றும் ரொசா ஆகியோர் ஒருவரையொருவர் உயிராக நேசிக்க தொடங்கினர். இதையடுத்து அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது, தம்பதி தேனிலவுக்கு இத்தாலி நாட்டிற்கு சென்றனர்.
கிறிஸ்டோபர் கூறுகையில், "நாங்கள் இருவரும் 80 களில் இருக்கிறோம், இன்னும் எவ்வளவு காலம் இருப்போம் என எங்களுக்குத் தெரியாது, எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்போம்” என கூறியுள்ளார்.