ஆங்கிலக்கால்வாயில் பல சங்கிலித் தடைகளை பிரான்ஸ் இட்டுள்ளது
Pas-de-Calais காவல்துறை ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
பிரான்சில் இருந்து பிரித்தானிய செல்லும் அகதிகளின் பயத்தை தடுக்க பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் Pierre ROQUES 'இத்தகைய தடைகள் பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் அகதிகளின் எண்ணத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
மாறாக இருப்பதை விட அதிகமான உயிர் ஆபத்தையே ஏற்படுத்தும். கடத்தல்காரர்கள் இந்த தடையை கடக்க தங்கள் பயணத்தின் திசையை மாற்றுவார்கள், அது தூரப்பயணமாக இருக்கும் இது ஆபத்தானது' என்று கூறுகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்து 52 000 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டது, அவர்கள் மீண்டும், மீண்டும் முயற்சித்து வருவதும், பலவேளைகளில் உயிராபத்துக்கள் ஏற்படுவதும் Pas-de-Calais மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.