நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்  வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது!

நீதித்துறை அதிகாரிகளால் சம்பளம் இன்றி சமர்ப்பிக்கப்படும் வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெளிநாட்டில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதனைஅறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4