LPL Final - கண்டி மற்றும் தம்புள்ள அணிகள் தகுதி
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி- லவ் கென்டி அணி தகுதி பெற்றுள்ளது.
இடம்பெற்ற ‘பி லவ் கென்டி’ அணிக்கும் கோல் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணியை 34 ஓட்டங்களால் வீழ்த்தி பி லவ் கென்டி அணி இவ்வாறு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய 'பி லவ் கென்டி' அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணித்தலைவர் வனிந்து ஹசரங்க 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களைப் பெற்றார். தினேஷ் சந்திமால் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களை எடுத்தார். கோல் டைட்டன்ஸ் அணி சார்பாக லஹிரு குமார மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, பதில் இன்னிங்ஸுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய 'கோல் டைட்டன்ஸ்' அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, LPL போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாளை (20) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 'தம்புள்ள அவுரா' அணி மற்றும் 'பி லவ் கென்டி' அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.