சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 ஆர்பிட்டர்

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Rocket
Mani
1 year ago
சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 ஆர்பிட்டர்

ஏற்கனவே நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கும் சந்திரயான்-3 லேண்டருக்கும் இடையே தொலைதொடர்பு வெற்றிகரமாக இணைப்பு

பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 லேண்டரை தொடர்பு கொள்ள கூடுதல் வழி உருவாகியுள்ளது

லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதாக இஸ்ரோ தகவல்

திட்டமிட்டபடி சந்திரயான்-3 லேண்டர் நிலவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் அடிப்படையில் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்து வருகிறது இஸ்ரோ.