பிரான்ஸில் தொடரும் வெப்பத்தால் காட்டுத்தீ பரவும் அபாயம்!
#France
#Lanka4
#heat
#வெப்பமயமாதல்
#காடு
#fire
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதான தெரிவிக்கப்பட்டு ஏழு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் 42.5°C எனும் அதிகூடிய வெப்பம் பதிவானது. இந்நிலையில் Hérault, Gard, Bouches-du-Rhône, Var, Vaucluse, Drôme மற்றும் Haute-Corse மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு இம்மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல நூறு தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெப்ப எச்சரிக்கை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.