மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் பிக்குகளின் அடாவடி (புகைப்படம் இணைப்பு)

#SriLanka #Batticaloa #Tamilnews #sri lanka tamil news
Shelva
2 years ago
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் பிக்குகளின் அடாவடி (புகைப்படம் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை (22) சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பல சமய மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று காலை மயிலத்தமடு பகுதிக்கு சகிதம் வாகனங்களில் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல் 12 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

இதன்போது எல்லைபகுதியிலுள்ள கம்பி பாலத்தின் பகுதியில் பௌத்த தேரர் ஒருவருடன் அந்தபகுதி சிங்கள மக்கள் ஒன்றினைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை எடுத்து அவர்களை தடுத்து வைத்துள்ளனர். 

வாகனத்தில் வருகை தந்த அனைவரையும் வாகனத்தில் வைத்து தீ மூட்டி எரிப்போம் எனவும் சிலர் பயமுறுத்தி உள்ளனர். இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசார் அந்த பகுதிக்கு சவருகை தந்து விசாரணைகளினை நடாத்தி வருகின்றனர். 

 இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தோடு இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


images/content-image/2023/08/1692703612.png

images/content-image/2023/08/1692703628.png

images/content-image/2023/08/1692703644.png

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4