ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!
#SriLanka
#strike
#Fisherman
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போன்று நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இலங்கை–இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, ஆகஸ்ட் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும், செப்டம்பர் 1 முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே