பிரான்ஸில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் பெற்றோல் விலை
#France
#prices
#Lanka4
#அதிகம்
#லங்கா4
#விலை
#petrol
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
பிரான்ஸில் தொடர்ச்சியாக ஆறாவது வாரமாக பெற்றோலின் விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 1.90 விலையினைக் கடந்துள்ளது.
95-E10 ரக பெற்றோல் ஒரு லிட்டர் 1.7 சதங்களினால் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 1.9137 யூரோக்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் பெற்றோலின் விலை 1.9 யூரோக்கள் விலையினைக் கடந்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 21 ஆம் திகதி இறுதியாக 1.9 யூரோக்களுக்கு மேல் பெற்றோல் விற்பனையாகியிருந்தது.
அதேவேளை, டீசலின் விலை இவ்வாரத்தில் அதிகரிக்கப்படவில்லை. டீசல் தொடர்ந்தும் 1.8336 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.