செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கார்ல்சென்- பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று 'டிரா'!

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கார்ல்சென்- பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று 'டிரா'!
10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் - இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர். மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர். இந்த நிலையில் இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது .நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். இறுதிச் சுற்று இரு ஆட்டங்களை கொண்டதாகும். 2வது சுற்று போட்டியும் சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4