தினேஷ் சாப்டர் உயிரிழந்தபோது அணிந்திருந்த ஆடைகளை விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தினேஷ் சாப்டர் உயிரிழந்தபோது அணிந்திருந்த ஆடைகளை விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

தற்போது அரசாங்கத்தின் மரண விசாரணை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர்  தினேஷ் ஷாப்டர் அணிந்திருந்த ஆடைகளை, அவருடைய மரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவிற்கு அனுப்பிவைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தினேஷ் சாப்டரின்  மரண விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மன்றில்  முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், மரணமான இடத்திலும், இறந்தவரின் வாகனத்திலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பொலிஸ் குற்றப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்காக மருத்துவ நிபுணர்  குழுவிடம் ஒப்படைக்குமாறு மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  

பின்னர், இதுதொடர்பான விசாரணை அறிக்கைகளை செப்டம்பர் 5ஆம் திகதி திரும்பப் பெறுமாறும்நீதவான் உத்தரவிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4