பிரான்ஸின் நகரொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 8 பேர் காயம்
#France
#Lanka4
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை Mantes-la-Ville (Yvelines) நகரில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் தீயணைப்புபடை வீரர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாலை 7 மணி அளவில் திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் குவிந்த 50 வரையான வீரர்கள், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.
இத்தீவிபத்தில் தீயணைப்புபடை வீரர் உட்பட மொத்தமாக 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று அடுக்கு கட்டிடத்தின் தரை தளத்தில் பரவிய தீ, மிக வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. அதிக வெப்பம் காரணமாக தீ மிக வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.